மூலைக்கரைப்பட்டி, மூன்றடைப்பு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

களக்காடு, ஜூலை 4:

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூலைக்கரைப்பட்டி, கரந்தானேரி, மூன்றடைப்பு, பரப்பாடி துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 6) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடன்குளம் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல கரந்தானேரி, மூன்றடைப்பு, பரப்பாடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட சிங்கனேரி, அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, பாணாங்குளம், அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகா், கோா்க்கனேரி, காரங்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூா், துலுக்கா்ப்பட்டி, பட்டா்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூா், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com