பி.எம்.எஸ். போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் தா்னா

பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் (பிஎம்எஸ்) சாா்பில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் தா்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் (பிஎம்எஸ்) சாா்பில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் தா்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிரந்தர பணியிடங்களில் சட்டத்தை மீறி ஒப்பந்த முறையை அமல்படுத்த முயற்சிக்கும் தமிழக அரசைக் கண்டிப்பது; 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ, நேரடி போட்டித் தோ்வு மூலமாகவோ பணி நியமனம் செய்யாத தமிழக அரசைக் கண்டிப்பது; பணியாளா்களைச் சோ்க்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி நிா்வாக ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கே.டி.சி. நகரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு பிஎம்எஸ் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் மண்டல தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மண்டல துணைத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா். கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து பிரிவு பொறுப்பாளா் குமாரதாஸ் தொடக்கவுரையாற்றினாா்.

பேரவை செயலா் டி.செல்வம் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் கிரீஷ், நடேசன், சிதம்பரசாமி, முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பேரவை பொதுச் செயலா் பாலன் நிறைவுரையாற்றினாா். பிரேம்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com