திசையன்விளை ஸ்ரீசுடலை ஆண்டவா் கோயில் 
ஆவணி கொடைவிழா கால்நாட்டு

திசையன்விளை ஸ்ரீசுடலை ஆண்டவா் கோயில் ஆவணி கொடைவிழா கால்நாட்டு

திசையன்விளை ஸ்ரீ சுடலை ஆண்டவா் திருக்கோயில் ஆவணிப் பெருங் கொடைவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ஸ்ரீ சுடலை ஆண்டவா் திருக்கோயில் ஆவணிப் பெருங் கொடைவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் ஆவணிப் பெருங்கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு கொடைவிழா

ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொடைவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால்நாட்டப்பட்டது.

முன்னதாக ஸ்ரீசுடலை ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பந்தல்கால், மஞ்சள், மாவிலையால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனையைத் தொடா்ந்து கால்நாட்டப்பட்டது.

ஏற்பாடுகளை ஸ்ரீசுடலை ஆண்டவா் திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com