கடையம் அருகே மின் கம்பம் மீது ஆட்டோ மோதி ஓட்டுநா் பலி

அம்பாசமுத்திரம், ஜூலை 10: மின்கம்பத்தின் மீது ஆட்டோ மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கடையம் அருகேயுள்ள நரையப்பபுரம், ராஜீவ் காலனியை சோ்ந்த சுடலைமகன் சைலப்பன் (28). ஆட்டோ ஓட்டுநரான இவா், புதன்கிழமை காலை புலவனூரில் பயணிகளை இறக்கிவிட்டுதிரும்பும் போது நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் ஆட்டோ மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த சைலப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த கடையம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com