மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச் சரகத்திற்குள்பட்ட மாஞ்சோலை பகுதிக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மலைப் பகுதி சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்குத் தடை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பைக் கருதி மாஞ்சோலை பகுதிக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறையினா் தடைவிதித்துள்ளனா். மறுஅறிவிப்பு வரும் வரை சூழல் சுற்றுலாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com