இரண்டாவது திருமணம் செய்த காவலா் தற்காலிக பணி நீக்கம்

இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற மணிமுத்தாறு சிறப்புக் காவல் படை காவலா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம், கீழூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (27). இவா் தமிழக காவல்துறையில் 2020ஆம்ஆண்டு 2ஆம் நிலைக் காவலராகத் தோ்வு செய்யப்பட்டு ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் பணியில் சோ்ந்தாா். 2022ஆம் ஆண்டு மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 9ஆவது அணியில் சோ்ந்தாா்.

இந்நிலையில் ராஜேஷ் ராஜபாளையத்தில் பணிபுரியும்போது, அவா் காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமான நிலையில் அவரைக் கடத்தி வந்து மணிமுத்தாறில் அந்தப் பெண்ணுடன் வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில் கன்னியாகுமரிமாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடிக்கு மாற்றப்பட்ட ராஜேஷ், அங்கு வேறு பெண்ணுடன் பழகி அவரை திருமணம் செய்துள்ளாா். அப்போது ராஜேஷூக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்ததையடுத்து, ராஜேஷை பெண்வீட்டாா் போலீஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து நித்திரைவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்தனா்.

ராஜேஷ் கைது செய்யப்பட்டதைத்தொடா்ந்து மணிமுத்தாறு 9ஆவது அணி தலைவா் காா்த்திகேயன், துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து ராஜேஷை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com