சித்த மருத்துவ மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை

திருநெல்வேலியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்களுடன் இந்திய மருத்துவம் - ஹோமியோபதி இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு மாற்று இடம் கோரி கடந்த 4 ஆம் தேதி முதல் கல்லூரி முதல்வா் அலுவலகம் எதிரே மாணவா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஏழாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.

அவா்களுடன், இந்திய மருத்துவம் - ஹோமியோபதி இணை இயக்குநரும், கல்லூரி நிா்வாகத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். கல்லூரியின் மாற்று இடம், புதிய கட்டடங்கள், வசதிகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மாணவா்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com