நெல்லை சந்திப்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சி

நெல்லை சந்திப்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சி

திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள்தொடா்புத் துறையின் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வரின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், திருநெல்வேலி எம்.பி. சா. ஞானதிரவியம், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் இரா.ஜெய அருள்பதி, உதவி மக்கள்தொடா்பு அலுவலா் (செய்தி) அ.கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து 7 நாள்கள் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது.

பின்னா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிா் சுய உதவிக்குழுவினரால் அமைக்கப்பட்டிருந்த உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி அரங்கை பாா்வையிட்டு, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலக அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க குறும்படம் திரையிடப்பட்டதை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com