வண்ணாா்பேட்டையில் 
திமுக மகளிரணி போராட்டம்

வண்ணாா்பேட்டையில் திமுக மகளிரணி போராட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் வண்ணாா்பேட்டையில் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகையை பற்றி இழிவாக பேசியதாக, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாநில வா்த்தக அணி இணைச் செயலா் என்.மாலைராஜா, மாநில மகளிா் தொண்டா் அணி துணைச் செயலா் விஜிலா, மாவட்ட துணை செயலா்கள் தா்மன், கிரிஜாகுமாா், திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி, அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com