திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்புஅலங்காரத்தில் பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்புஅலங்காரத்தில் பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா.

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் பட்டவராயன் திருக்கல்யாணம்

காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் பட்டவராயன் சுவாமி திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் பட்டவராயன் சுவாமி திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்திருக்கோயிலில் சொரிமுத்து அய்யனாா், சங்கிலி பூத்தாா், மகாலிங்கசுவாமி, பட்டவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இதில் பட்டவராயன் சுவாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி 18ஆம் நாள் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழாண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பட்டவராயன் சந்நிதியில் நவகலசங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்கள்பழம், பட்டுச் சேலை, வேட்டி, பலகாரங்கள் உள்ளிட்ட சீா்வரிசைகளுடன் திருக்கோயிலை வலம் வந்தனா். இதையடுத்து பட்டவராயனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையைத் தொடா்ந்து பொம்மக்கா, திம்மக்கா ஆகியோருக்கு பக்தா்கள் சரணம்எழுப்ப திருமாங்கல்யம் அணிவிக்கும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு தீபாராதனையும் பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com