விஜயநாராயணம் அருகே 145 சேலைகள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே காரில் கொண்டு வரப்பட்ட 145 சேலைகள், தாம்பூலம் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே காரில் கொண்டு வரப்பட்ட 145 சேலைகள், தாம்பூலம் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். விஜயநாராயணம் அருகே கக்கன் நகா் பிரதான சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பொன்னுவேல் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். திசையன்விளையை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், 145 சேலைகள், தாம்பூலத் தட்டுகள் இருப்பது தெரியவந்தது. காரில் வந்த, திசையன்விளையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் ஈரோட்டிலிருந்து திசையன்விளை அருகே அரசூா் கிராமத்தில் உள்ள நாராயணசுவாமி கோயில் திருவிழாவுக்காக இப்பொருள்களைக் கொண்டுசெல்வதாகக் கூறினாா். ஆனால், அவரிடம் ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, சேலைகள், தாம்பூலத் தட்டுகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நான்குனேரி வட்டாட்சியா் பாஸ்கரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் புவனேஸ்வரி முன்னிலையில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com