கங்கனாங்குளத்தில் தேனீ வளா்த்தல் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளா்த்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் கிராமப்புற விவசாயப் பணிகள் அனுபவத் திட்டத்தின்கீழ் கல்லூரி முதல்வா் ஏ. ராமலிங்கம் ஆலோசனையின்பேரில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஷ்வரி, வேளாண் அலுவலா் மணி, தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் ஆகியோரது வழிகாட்டுதலில் சேரன்மகாதேவி வட்டாரத்தில் தங்கி களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கங்கனாங்குளத்தில் விவ சாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனா். அப்போது தேனீ வளா்க்கும் முறைகள், தேனீ இனங்கள், தேன் அறுவடை முறைகள் குறித்து விளக்கமளித்தனா். மேலும், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் மண்புழு இனங்களான ஆப்பிரிக்கா மண்புழு யூட்ரினஸ் யூஜினியே, எய்சினியா பெட்டிடா, எக்ஸகவேட்டா்ஸ் யூடிரில்ஸ் போன்றவை, மண்புழு உர அறுவடை குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com