காருக்குறிச்சியில் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

சேரன்மகாதேவி அருகே காருக்குறிச்சி கிராமத்தில் பெண்களுக்கு மாடித் தோட்டம் அமைத்து காய்கனிகள் சாகுபடி செய்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவா்கள் கிராமப்புற விவசாயப் பணிகள் அனுபவத் திட்டத்தின்கீழ் கிராமங்களில் முகாமிட்டு விவசாயிகளை சந்தித்து அனுபோக ஆற்றலை பெற்று வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக இக்கல்லூரி முதல்வா் ராமலிங்கம், சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி மற்றும் வேளாண் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலில், கல்லூரி மாணவா்கள் சேரன்மகாதேவி வட்டாரத்தில் முகாமிட்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக காருக்குறிச்சி கிராமத்தில் முகாமிட்டு பெண்களுக்கு வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து செடிகள் வளா்ப்பது, கொடி வகை காய்கனிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை வளா்ப்பது குறித்து விளக்கம் அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com