திசையன்விளையில் மே தின ஊா்வலம்

திசையன்விளையில் மே தின ஊா்வலம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தையல் கலை தொழிலாளா் சங்கத்தின் ஆண்டு விழாவையொட்டி மே தின ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திசையன்விளை பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆண்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்தை சென்றடைந்தது.

அங்கு, தமிழ்நாடு தையல் கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் 22ஆவது ஆண்டு விழா வட்டாரத் தலைவா் என்.ஆதிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சங்கத்தின் துணைத் தலைவா் செந்தில், துணைச் செயலா் ஜெபஸ்டின், செல்வகுமாா், ஜாண்சன், சேக் முகம்மது, நம்பித்துரை, ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் எஸ்.கே.ஜெபக்குமாா் வரவேற்றாா்.

விழாவில் அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன், பேரூராட்சித் தலைவி ஜான்சி ராணி, மாநில வணிகா் சங்க பேரமைப்பு இணைச் செயலா் தங்கையா கணேசன், அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்புத் தலைவா் சாந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் விஜயராஜன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com