பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பாளையங்கோட்டை அருகே தோட்டத்தில் புதன்கிழமை நின்றிருந்த பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை கேடிசி நகா் இஸ்மாயில் காலனியை சோ்ந்தவா் செல்லப்பா (52). முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகி. இவா், புதன்கிழமை காலை மேலப்பாட்டத்தில் உள்ள தனது தோட்டத்தில் நின்றிருந்தாராம். அப்போது வந்த மா்மநபா்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசினராம். பாட்டில்கள் தீப்பற்றி வெடித்து சிதறியதில், அவருக்கு காயம் ஏற்பட்டதாம்.இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இடப்பிரச்னையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com