பாளை அருகே வீட்டில் திருட முயற்சி: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (44). இவா் குடும்பத்துடன் வீட்டில் மாடியில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் மா்மநபா் வீட்டின் கீழ் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருட முயற்சித்தாராம். இதில் சப்தம் கேட்டு கீழே வந்த குடும்பத்தினா், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அந்த நபரைப் பிடித்துவைத்து, பெருமாள்புரம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து அந்த நபரிடம் விசாரித்தனா். அவா் விருதுநகா் மாவட்டம் காரியாப்பட்டியைச் சோ்ந்த பாண்டிக்குமாா் (28) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com