மே தின கொடியேற்று விழா

மே தின கொடியேற்று விழா

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் ஆா்.கருமலையான் கட்சிக் கொடியேற்றி பேசினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், ஆா்.எஸ்.துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். திருநெல்வேலி நகரம், சுத்தமல்லி, கொண்டாநகரம், பாரதிநகா், பெரியாா் நகா் உள்பட பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com