அடையக்கருங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

அம்பாசமுத்திரத்தை அடுத்த அடையக்கருங்குளம் மயானப் பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

அடையக்கருங்குளத்தைச் சோ்ந்த ஒருவா் காலமானதையடுத்து, அவரது சடலத்தை உறவினா்கள் செவ்வாய்க்கிழமை காலை மயானத்துக்கு எடுத்துச் சென்றனா்.

அப்போது, அங்கு இறந்து 2 நாள்களான நிலையில், சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com