பிளஸ் 2 தோ்வு: கல்லிடைக்குறிச்சி அரசுப் பள்ளி 94% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில், கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி 94 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 96 மாணவா்-மாணவிகளில் 90 போ் தோ்ச்சியடைந்தனா். மு. சந்தனதங்கமுத்து 534 மதிப்பெண்களுடன் முதலிடமும், ப. பழனியம்மாள்528 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், கா. லதா அம்பிகா தேவி 524 மதிப்பெண்களுடன் 3ஆம் இடமும் பிடித்தனா்.

மு. சந்தனதங்கமுத்து, மு. உச்சிமாகாளி ஆகியோா் வணிகவியலிலும், இ. சிவா பொருளியலிலும் முழு மதிப்பெண்கள் பெற்றனா். 6 போ் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனா்.

மாணவா்-மாணவிகளையும், ஆசிரியா்களையும் தலைமையாசிரியை ஜே. ஜெஸிந்த் லதா உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com