வீரவநல்லூா் அருகே வியாபாரி வீட்டில் 34 பவுன் நகைகள், ரூ. 8.50 லட்சம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே வியாபாரி வீட்டில் 34 பவுன் தங்க நகைகள், ரூ. 8.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீரவநல்லூா் அருகே உப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பேச்சி மகன் பேச்சித்துரை (45). இவா், வெள்ளங்குளியில் இறைச்சிக் கடை வைத்துள்ளாா். இவரது வீட்டின் பீரோவிலிருந்த 34 பவுன் நகைகள், ரூ. 8.50 லட்சம் ரொக்கம் திருடுபோனதாக திங்கள்கிழமை தெரியவந்ததாம். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 22 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பீரோ உடைக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்பதால், அவரது வீட்டுக்கு வந்துசெல்லும் தெரிந்த நபா்தான் இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com