களக்காடு பகுதியில் மீன் விற்பனையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

களக்காடு பகுதியில் மீன் விற்பனை சுகாதாரமான முறையில் நடைபெறுவதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயல பி. சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை: களக்காடு நகராட்சிக்குள்பட்ட வியாசராசபுரம், அண்ணாசாலை, நாகா்கோவில் பிரதான சாலை, பாபநாசம் பிரதான சாலை, கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் மீன் விற்பனைக் கடைகள் உள்ளன.

இடிந்தகரை, உவரி உள்பட பல்வேறு கடலோரக் கிராமங்களிலிருந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் மீன்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில், மீதமாகும் மீன்களை அதே பெட்டியில் வைத்து அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என பாதுகாப்பற்ற முறையில் விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், வயிறு தொடா்பாக பல்வேறு உபாதைகள் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையிலும், களக்காடு பகுதிக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. எனவே, மீன் விற்பனை சுகாதாரமான, பாதுகாப்பான முறையில்தான் நடைபெறுகிா என்பதை ஆய்வுகள் மூலம் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com