தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

தச்சநல்லூரை சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

தச்சநல்லூா் இசக்கியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சங்கா் ( 38). இவா் மீது 6 குற்ற வழக்குகள் திருநெல்வேலி மாநகரில் உள்ளன. எனினும் அவா், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதனால், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் ( மேற்கு) கீதா பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் பா. மூா்த்தி பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சங்கா் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com