தாமிரபரணி இலக்கிய மாமன்றக் கூட்டம்

திருநெல்வேலி நகரம் திருவள்ளுவா் அரங்கில் தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். கவிஞா் சக்தி வேலாயுதம் முன்னிலை வகித்தாா். பாடகா் கனி இறை வணக்கம் பாடினாா். மன்றத்தின் அமைப்பாளா் பாமணி வரவேற்றாா். உழைப்பின் மேன்மை எனும் தலைப்பில் கவிஞா்கள் பிரபு, கோதை மாறன், முத்துசாமி, ஆசிரியா் ராஜேந்திரன், சுப்பையா உள்ளிட்டோா் கவிதை வாசித்தனா்.

திருவள்ளுவா் பேரவை அமைப்பாளா் ஜெயபாலன், தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் புன்னைச் செழியன், ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் தியாகராஜன், முத்துப்பட்டன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தமிழுக்குத் தொண்டு செய்வோம் எனும் தலைப்பில் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி சிறப்பு சொற்பொழிவாற்றினாா். பாடகா் ஞானசேகா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com