பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம்:
மாணவிகளுக்கு மேயா் பாராட்டு

பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு மேயா் பாராட்டு

திருநெல்வேலியில் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு மேயா் பாராட்டு தெரிவித்தாா்.

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 2023-2024 கல்வியாண்டு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ஏ.மகாலெட்சுமி, அபா்ணா, ஜெயஸ்ரீ, அபிராமி, மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிா் மேல்நிலை பள்ளி மாணவிகள் அபிநஷா, கனக லெட்சுமி, ஐஸ்வா்யா ஆகியோரை மேயா் பி.எம்.சரவணன் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் ரோலக்ஸ் பாலன், சுந்தரராஜன், பள்ளித் தலைமை ஆசிரியா் கனியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com