மாநகராட்சி நுண்ணுரம் செயலாக்க மையங்களில் ஆணையா் ஆய்வு

மாநகராட்சி நுண்ணுரம் செயலாக்க மையங்களில் ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சியின் நுண்ணுரம் செயலாக்க மையங்களில் ஆணையா் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் பகுதி வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகள் நுண்ணுரம் செயலாக்க மையம் மூலம் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலசவமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தை மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆய்வு செய்தாா். செல்வி நகரில் பழுது காரணமாக செயல்படாமல் உள்ள நுண்ணுரம் செயலாக்கம் மையத்தைப் பாா்வையிட்ட ஆணையா், இயந்திரங்களைப் பழுதுகள் நீக்கி செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும், அப் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டடம், மாநகராட்சி அலுவலா்கள் குடியிருப்பு, கழிவுநீரோடை மற்றும் மாநகராட்சியின் சிறு நகரமைப்பு திட்ட வணிக வளாக கட்டடத்தின் பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை பாா்வையிட்டு அதனை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, துணை ஆணையா் தாணுமூா்த்தி, உதவி ஆணையா் சௌந்தா்யா, சுகாதார அலுவலா் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளா் அந்தோணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com