கனமழை: திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

தொடா்மழையால் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.
Published on

தொடா்மழையால் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக, நம்பியாற்றில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலுக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்தனா்.

நீா்வரத்து குறைந்தவுடன் தடை விலக்கிக் கொள்ளப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.