திரையரங்கு மீது குண்டு வீசிய வழக்கில் ஒருவரிடம் விசாரணை
மேலப்பாளையத்தில் உள்ள தனியாா் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள தனியாா் திரையரங்கில் நடிகா் சூா்யா நடித்துள்ள கங்குவா, சிவகாா்த்திகேயன் நடித்துள்ள அமரன் உள்ளிட்ட திரைப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திரையரங்கு வளாகத்தில் மா்ம நபா்கள் இருவா் 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தென் மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் திருநெல்வேலியில் முகாமிட்டு செவ்வாய்க்கிழமை 3-ஆவது நாளாக விசாரித்து வருகின்றனா்.
மேலும், அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.