திருநெல்வேலி
வி.கே.புரம் பகுதியில் தொடா் திருட்டு: இருவா் கைது; 14 பவுன் நகைகள் பறிமுதல்
விக்கிரமசிங்கபுரத்தில் வீடுகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 14 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் வீடுகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 14 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சிவந்திபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்தனா்.
அவா்கள் விக்கிரமசிங்கபுரம், பசுக்கிடைவிளை வடக்குத் தெரு செந்தில்குமாா் மகன் சூா்யா (24), கோட்டைவிளைப்பட்டி, வடக்கு அருந்ததியா் தெரு பேச்சிமுத்து மகன் சுரேஷ் (24) என்பதும், கடந்த அக். 12ஆம் தேதி பசுக்கிடைவிளையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் ஜான்பிரிட்டோ வீடு உள்பட சில வீடுகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்து, 14 பவுன் தங்க நகைகள், ரூ. 19 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.