தூய சவேரியாா் பேராலயத் திருவிழா: நாளை கொடியேற்றம்
பாளையங்கோட்டைதூய சவேரியாா் பேராலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பாளையங்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த தூய சவேரியாா் பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஆ. ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலியும், கொடியேற்றமும் நடைபெற உள்ளது. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் மாலையில் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது.
டிசம்பா் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருள்சாதன நிகழ்வும், 2 ஆம் தேதி புனிதரின் சப்பர பவனியும் நடைபெற உள்ளது. 3 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற உள்ளது.
பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி மறையுரையாற்றுகிறாா்.
மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.
டிச. 8 ஆம் தேதிகாலை 7.30 மணிக்கு உறுதிப்பூசுதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தையா்கள் செய்து வருகிறாா்கள்.