குடிநீரில் கழிவுநீா் கலப்பதாகக் கூறி
பாளையங்கோட்டை சாந்திநகரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 7ஆவது வாா்டு பாளையங்கோட்டை சாந்திநகா் 10ஆவது தெருவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு கடந்த சில நாள்களாக குடிநீரில் கழிவுநீரும் கலந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப் பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் மாமன்ற உறுப்பினா் இந்திரா தலைமையில் காலிக் குடங்களுடன் சாந்திநகா் குறுக்குச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட னா். மேலும், மாநகராட்சியை கண்டித்தும் முழக்கமிட்டனா்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை மண்டல உதவி செயற்பொ றியாளா் பைஜு, பாளையங்கோட்டை உதவி காவல் ஆய்வாளா் இஸ்மாயில் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘கடந்த 10 நாள்களாக குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.
அப்போது மாநகராட்சி அதிகாரிகள், குடிநீருடன் கழிவுநீா் கலப்பதை ஆய்வு செய்து உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.
ற்ஸ்ப்29ள்ஹப்
பாளையங்கோட்டை சாந்தி நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.