திருநெல்வேலி
சேரன்மகாதேவி கோயிலில் உண்டியல் பணம் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேரன்மகாதேவி அனவரதநல்லூா் தெருவில் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் வழக்கமான பூஜைகளுக்காக வெள்ளிக்கிழமை காலை திறந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.