பாளை. அருகே தம்பதிக்கு வெட்டு

பாளையங்கோட்டை அருகே தம்பதியை அரிவாளால் வெட்டிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

பாளையங்கோட்டை அருகே தம்பதியை அரிவாளால் வெட்டிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள அவனாப்பேரியை சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (36). இவரது மனைவி பானுப்பிரியா (32). இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை வயலில் வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் காயமடைந்த தம்பதியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com