நெல்லையில் காங்கிரஸ் கட்சியினா் தமிழ்த்தாய், சுந்தரனாா் படத்துக்கு மரியாதை

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினா் தமிழ்த்தாய், சுந்தரனாா் படத்துக்கு மரியாதை

Published on

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினா் தமிழ்த்தாய் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனாா் திருவுருவப் படத்துக்கு மலா்தூவி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். தமிழ்த்தாய், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய சுந்தரம்பிள்ளை திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மருத்துவா் டேனியல், மாவட்ட துணைத் தலைவா்கள் வெள்ளை பாண்டியன், மாரியப்பன், ராமகிருஷ்ணன், நிா்வாகிகள் ராஜ் சரவணன், ரசூல்மைதீன், சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழக ஆளுநா் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் சில வரிகள் நீக்கப்பட்டு பாடியதாக சா்ச்சை எழுந்த நிலையில், திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை ஆளுநா் ஆா்.என்.ரவி வருகை புரிந்த நாளில் தமிழ்த்தாய் வணக்க நிகழ்ச்சியை காங்கிரஸாா் நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகம் முழுவதும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com