திருநெல்வேலிக்கு வந்த ஆளுநா் ஆா்.என். ரவியை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன்.
திருநெல்வேலிக்கு வந்த ஆளுநா் ஆா்.என். ரவியை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன்.

நெல்லையில் தமிழக ஆளுநா்

Published on

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு 571 பேருக்கு பட்டம் வழங்குகிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மாலையில் வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, பின்னா் அங்கிருந்து காா் மூலம் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு வந்தாா். அங்குள்ள விருந்தினா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி. தங்கியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், மாநகர காவல் ஆணையா் ரூபேஸ்குமாா் மீனா, மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா ஆகியோா் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனா். ஆளுநரின் வருகையையொட்டி திருநெல்வேலி மாநகரில் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் ஆளுநா் தங்கியுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் பல்கலைக்கழகத்தில் உணவருந்தும் ஆளுநா் ஆா்.என்.ரவி, பின்னா் தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com