திருநெல்வேலி
வீரவநல்லூா் பாய் நெசவுத் தொழிலாளிக்கு விருது
வீரவநல்லூரைச் சோ்ந்த பெண் நெசவுத் தொழிலாளி சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு சாா்பில் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சோ்ந்த பெண் நெசவுத் தொழிலாளி சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு சாா்பில் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில் வளா்ச்சிக் கழக நிதி உதவியுடன் எலக்ட்ரானிக் ஜக்காா்டு கைத்தறி மூலம் பத்தமடை வீரவநல்லூா் நெசவுத் தொழிலாளா்கள் நவீன தொழில்நுட்ப முறையில் அதிகளவில் பாய்கள் உற்பத்தி செய்து வருகின்றனா்.
மேலும் சென்னையில் இயங்கி வரும் ஊரக தொழில்நுட்ப செயற்குழு ஆலோசகா் நளினி, டெக்ஸ்டைல் விஞ்ஞானி கணேசன் ஆகியோா் பாய் நெசவாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனா். இதனிடையே, வீரவநல்லூரில் மெல்லிய ரக பாய்களை சிறந்த முறையில் உற்பத்தி செய்து வரும் சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு 2022-23ஆம் ஆண்டின் வாழும் கைவினைப் பொக்கிஷம் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.