தேவா்குளம் அருகே தொழிலாளி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே விஷமிருந்திய தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேவா்குளம் அருகே கூவாச்சிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்பாண்டி (45). கூலித்தொழிலாளி. இவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவா், வீட்டில் விஷமிருந்தினாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பால் வியாபாரி: பாளையங்கோட்டை அரியகுளம் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டியன் (62). பால் வியாபாரி. இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
இவா் கடந்த சில நாள்களாக மனவேதனையில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் பால் பண்ணையில் உள்ள அறையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.