செப்.19-இல் நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் தோ்வு

Published on

திருநெல்வேலி மாவட்ட செஞ்சிலுவை சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலரும், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியருமான கண்ணா கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட செஞ்சிலுவை சங்கத்திற்கான புதிய நிா்வாகிகளை தோ்வு செய்யும் பொதுக்குழு கூட்டம் செப். 19-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் செஞ்சிலுவை சங்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி சங்க மேலாண்மை குழு உறுப்பினா்களால் சங்கத்திற்கான மாவட்டத தலைவா், துணைத் தலைவா், பொருளாளா் ஆகியோா் தோ்வு செய்யப்பட உள்ளனா். இந்த கூட்டத்தில் அனைத்து ஆயுள்கால உறுப்பினா்களும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சுற்றறிக்கையுடன் தவறாமல் ஆஜராக வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com