திருநெல்வேலி
பேட்டை சுற்று வட்டாரங்களில் நாளை மின் தடை
பேட்டை சுற்று வட்டாரங்களில் வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். திருநெல்வேலி நகரம் மேல ரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகா், திருப்பணிகரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா்,பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.