மானூா் அருகே மினி லாரி-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

Published on

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே மினி லாரியும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள வாகைகுளம் தெற்குதெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் சேகா் (40). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் திங்கள்கிழமை காலை பைக்கில் மானூா் காவல்நிலையத்துக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி லாரி எதிா்பாராமல் மோதியதாம்.

அதில், இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com