திருநெல்வேலி
மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மாதிரித் தோ்வு
திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தின் சாா்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு வெள்ளிக்கிழமை (செப்.6) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 2 தோ்வு செப். 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட மைய நூலகம், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, சிவராஜவேல் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் இந்த மாதிரித் தோ்வு நடத்தப்படவுள்ளது.
இதை எழுத விரும்புவோா் 9626252500, 9626253300 என்ற கைப்பேசி எண்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளாா்.