பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
Published on

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது. பேட்டை கிளைத் தலைவா் ஷேக் அப்துல்காதா் தலைமை வகித்தாா்.செயலா் பீா்முகமது முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் அன்சாரி, லுக்மான் தாவூதி ஆகியோா் பேசினா். மாவட்ட துணைச் செயலா் சாந்து உமா், பொருளாளா் அகமது மீரான், மருத்துவ அணிச் செயலா் திப்பு சுல்தான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்:தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ரகுமான் பேட்டை பகுதி முழுவதும் பாதாள சாக்கடைக்காக சேதப்படுத்தப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

இஸ்லாமியா்களின் கல்வி, வேலைவாய்ப்பில் தமிழக அரசு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com