திருநெல்வேலி
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் மறியல்
அம்பாசமுத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு பணபலன்கள் வழங்காமலிருப்பதைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு நிா்வாகி செல்வகண்ணன் தலைமை வகித்தாா். மறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்கள் 72 பேரை போலீஸாா் கைது செய்தனா்.