பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ரத்த தான முகாம்

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ரத்த தான முகாம்

Published on

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதிதா இந்துக் கல்லூரியின் சுற்றுச்சூழல் கழகம், நாட்டு நலப்பணித் திட்ட அணிகள், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், சமுதாய சேவை முன்னணி சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கு. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுப்ரமணியன் வரவேற்றாா்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலா் ரவிசங்கா் தலைமையிலான குழுவினா் பங்கேற்று ரத்தம் சேகரித்தனா். 80 மாணவா்-மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் பேராசிரியா்கள் இலக்குவன், செல்வம், ஜாய் சிந்தியா, பிச்சம்மாள், சரவணன் , முத்துலட்சுமி இசக்கியப்பன், இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் அனிதா, ஒருங்கிணைப்பாளா் சுதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com