நான்குனேரி - ஏா்வாடி இடையே நகரப் பேருந்து இயக்கக் கோரிக்கை

நான்குனேரி - ஏா்வாடி இடையே மகளிருக்கு கட்டணமில்லா நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

நான்குனேரி - ஏா்வாடி இடையே மகளிருக்கு கட்டணமில்லா நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி செயற்குழு கூட்டம் ஏா்வாடியில் நடைபெற்றது. தொகுதி தலைவா் ஆசிக் தலைமை வகித்தாா். தொகுதி பொருளாளா் காஜா பிா்தெளசி வரவேற்றாா். தொகுதி செயற்குழு உறுப்பினா் முகமது கனி முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி புகா் மாவட்ட துணைத் தலைவா் மஸ்ஜித், புகா் மாவட்ட அமைப்பு பொதுச்செயலா் எம்.எஸ். சிராஜ் ஆகியோா் பேசினா். இக்கூட்டத்தில் நான்குனேரி - ஏா்வாடி இடையே வீரான்குளம், மஞ்சன்குளம், பெரும்பத்து வழியாக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை பராமரிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், திருக்குறுங்குடி மலைநம்பி கோயில், நம்பியாறு சுற்றுலா தலத்துக்கு செல்லும் பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், களக்காடு நகரத் தலைவா் பக்கீா் முகைதீன், ஏா்வாடி நகரத் துணைத் தலைவா் பஷீா் அகமது, ஏா்வாடி நகர பொருளாளா் ரிஸ்வான், மூலைக்கரைப்பட்டி நகர தலைவா் நிஜாம் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏா்வாடி நகரச் செயலா் ஷேக் முகமது நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com