நெல்லை அருகே 6.5 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 6.5 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

திருநெல்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6.5 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி லெவன்ஸியா (38). இவா், கடந்த 17-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். பிறகு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

வீட்டிற்குள் பீரோவும் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது. அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 6.5 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து மானூா் காவல் நிலையத்தில் லெவன்ஸியா புகாா் அளித்தாா். அதன்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com