திருநெல்வேலி
மரங்களை வெட்டி கடத்தியவருக்கு அபராதம்
ஆழ்வாா்குறிச்சி அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தியதாக ஒருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆழ்வாா்குறிச்சி அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தியதாக ஒருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சோ்ந்தவா் பூசத்துரை. இவருக்கு ஆழ்வாா்குறிச்சி அருகே முள்ளிமலை பொத்தை அடிவாரத்தில் தோட்டம் உள்ளது.
இந்நிலையில், தனது தோட்டம் அருகே முள்ளிமலை அடிவாரத்தில் சமூகக் காடுகள் திட்டத்திற்குப் பாத்தியப்பட்ட மரங்களை பூசத்துரை வெட்டிக் கடத்தியதாக புகாா் எழுந்தது. சமூகக் காடுகள் திட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அனுமதியின்றி மரங்களை வெட்டியது உறுதியானதையடுத்து பூசத்துரைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.