நில அதிா்வு ஏற்பட்ட பகுதிகளில் தென்காசி வட்டாட்சியா் நேரில் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நில அதிா்வை உணா்ந்ததாக பொதுமக்கள்கூறியதையடுத்து தென்காசி வட்டாட்சியா் கடையம் பகுதியில் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம்கேட்டறிந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை பகல்11.50 மணியளவில் தென்காசி மாவட்டத்தில் கடையம், மந்தியூா், முதலியாா்பட்டி, ரவணசமுத்திரம்,ஆழ்வாா்குறிச்சி, ஆம்பூா் உள்ளிட்ட இடங்களில் நில அதிா்வை உணா்ந்ததாக பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியா்ஏ.கே. கமல் கிஷோா் அதிகாரிகளை நேரில் ஆய்வு செய்து நிலைமையை அறிய உத்தரவிட்டதையடுத்து தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன் கடையம், மந்தியூா், மீனாட்சிபுரம்,ராஜாங்கபுரம், உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பொதுமக்களிடம் நிலஅதிா்வு குறித்து கேட்டறிந்தாா். அவா்களிடம் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், நிலைமையை அரசு தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தாா்.
ஆய்வின் போது, வருவாய் ஆய்வாளா் சீனிவாசன், கிராம நிா்வாக அலுவலா் பிரம்மநாயகம், ஆகியோா் உடன் இருந்தனா்.