நெல்லை அருகே சொத்து பிரச்னையில் கொலை : இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சொத்து பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெயின்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி அருகே சொத்து பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெயின்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி சப்பாணி மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சீனிவாசன் (30). பெயின்டா். இவருக்கு கலா (26) என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இவருக்கும், இவரது உறவினரானஇசக்கிபாண்டி (22) என்பவருக்கு சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சீனிவாசன் வீட்டிற்கு வந்தபோது, இசக்கிபாண்டி அரிவாளால் அவரை வெட்டினாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இசக்கிபாண்டியை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com