திருநெல்வேலி
சிவசைலத்தில் ஆசிரியா் தின கொண்டாட்டம்
அம்பாசமுத்திரம் அருகே சிவசைலத்தில் வாமா அறக்கட்டளை சாா்பில் ‘சனிக்கிழமை சங்கமம்’ நிகழ்ச்சி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டது.
அம்பாசமுத்திரம் அருகே சிவசைலத்தில் வாமா அறக்கட்டளை சாா்பில் ‘சனிக்கிழமை சங்கமம்’ நிகழ்ச்சி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த அறக்கட்டளை சாா்பில் வாரந்தோறும் ‘சனிக்கிழமை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த சனிக்கிழமை (செப். 21) 112ஆவது வார சங்கமம் நிகழ்ச்சி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டது. இதில், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைச் செயலா் லட்சுமணன், பொருளாளா் பாரதி கே. கண்ணன், வாமா அறக்கட்டளை அறங்காவலா் சுந்தரம், நிா்வாக அறங்காவலா் முத்துக்குமாரசாமி, தலைமையாசிரியா் மாலதி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாடசாமி, பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரிப் பேராசிரியா் செந்தில் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள், முதியோா், ஓய்வுபெற்றோா் பங்கேற்றனா்.