விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் மோசடி வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், சபரி காம்ப்ளக்ஸை சோ்ந்த கணேசன் (59) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தாா். இதையடுத்து ஒரு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு கணேசன் ஆஜராகாமல் தலைமறைவானாராம்.

அவரை கைது செய்ய நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, கணேசனை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com